English Tamil Malay

பினாங்கு தேசிய முன்னணி மகளிர் பகுதி தலைவியின் உடனடி உதவிக்கு டாக்டர் ச.குமரேசன் நன்றி

செபராங் ஜெயா ஜூலை 31-பினாங்கு மாநில தேசிய முன்னணியின் மகளிர் பிரிவு தலைவி  டத்தோ நோர்லிசா அப்துல் ரஹீம் முயற்சியால், செபராங் ஜெயா பள்ளிவாசல் வளாகத்தில் வீடு இல்லாமல் வசித்து வந்த திரு. அப்துல் ரஹீம் அப்துலா குடும்பத்திற்கு வீடு கிடைக்க உடனடி உதவிகளை வழங்கினார்.

பினாங்கு மாநில சமூக நலத்துறையின் உதவியுடன் செபராங் ஜெயாவில் தெங்கிரி பகுதியில் வாடகைக்கு வீடு ஏற்படுத்திக் கொடுத்த அவர்  நிதி உதவி ,ஒரு மாத வீட்டு வாடகை உட்படச்  சமையல் பொருட்களை வாங்கவும் நிதி கொடுத்து உதவினர்.

டத்தோ நோர்லீசா

இதனுடன் பினாங்கு மாநில ஐபிஎப் மகளிர் பகுதியின் சார்பாக அப்துல் ரஹீம் அப்துலா குடும்பத்திற்கு மதிய உணவை வழங்கியும் ஆதரவு அளித்தனர். 
பினாங்கு மாநில ஐபிஎப் கட்சியின் மகளிர் பகுதியின் சார்பாக அப்துல் ரஹீம் அப்துலா குடும்பத்திற்கு மதிய உணவை வழங்கினார். 

பினாங்கு மாநில ஐபிஎப் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் ச.குமரேசன்,மாநில தேசிய முன்னணி மகளிர் பகுதி தலைவி டத்தோ நோர்லீஸா வீடின்றி தவித்த அப்துல் ரஹீம் அப்துலா குடும்பத்திற்கு உதவ எடுத்த அனைத்து முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

 154 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *