நிபோங் திபால் ஜூலை 6
பெண்கள் வீட்டில் மட்டுமின்றி ஒவ்வொரு கட்சியிலும் வலிமையான சக்தியாக திகழ்கிறார்கள் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் கூறினார்.
அதேபோல் நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பெண்கள் உறுதுணையாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு நிபோங் திபால் தொகுதி மக்கள் சக்தி கட்சியின் மகளிர் பணிப்படைபின் சந்திப்பு கூட்டத்தை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
இதனிடையே வரும் 15ஆவது பொதுத் தேர்தலை சந்திக்க நிபோங் திபால் தொகுதி மக்கள் சக்தி தயார் என அதன் தலைவர் மாஸ்டர் கவிக்குமார் கூறினார்.
நிபோங் திபால் தொகுதி மக்கள் சக்தி வரும் பொது தேர்தலில் களமிறங்க என்றுமே தயார் என்று அவர்.
இந்த நிகழ்வில் தனேந்திரனின் துணைவியார் டத்தின் ஸ்ரீ வேணி, கட்சியின் மகளிர் பிரிவு ஆலோசகரும் நிபோங் திபால் தொகுதி அம்னோ தலைவருமான ஹாஜி அபு பாக்கர், பினாங்கு மக்கள் சக்தி கட்சியின் துணைத் தலைவர் லோகன், கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி, மாநில செயலாளர் சாந்தி மற்றும் நிபோங் திபால் தொகுதி செயலவை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
201 total views, 1 views today