English Tamil Malay

ஆர்.தசரதன்

ஜார்ஜ்டவுன் ஏப்ரல் 1 பினாங்கு,வடகிழக்கு மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கடந்த 25.03.2021 அன்று  நள்ளிரவு 12.30 மணியளவில் கூலிம்,லாபு பேசார் பகுதியில் உள்ள  குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட இரண்டு அதிரடி சோதனையில் மோட்டார் சைக்கிள் திருடும் கும்பலைச்  சேர்ந்த  ஏழு ஆடவர்களை கைது செய்ததுடன் அவர்கள் தங்கியுள்ள வீட்டிலிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உபரிப்பகங்களை கைப்பற்றினர்.  


கைதான ஆடவர்களிடம் காவல் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் திருடப்படும் மோட்டார் சைக்கிள் பாகங்கள் அனைத்தும் கூலிம், சுங்கை சீடிம் ஆற்றினில் வீசியதாக கூறியதை தொடர்ந்து,காவல் துறை அதிகாரிகள் அந்த ஆற்றிலிருந்து 25  மோட்டார் சைக்கிள் பாகத்தின் வடிவமைப்பை மீட்டதாக பினாங்கு,வடகிழக்கு மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி சோப்பியான் சந்தோங் கூறினார்.


கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் வாகனங்கள் அனைத்தும் பினாங்கு வடகிழக்கு,மற்றும் தென் மேற்கு மாவட்டத்தில் கொள்ளையிடப்பட்டவை என ஏசிபி சோப்பியான். சந்தோங் மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்ட ஆடவர்கள் யாவரும் 18 வயது  முதல் 34 வயதுடையவர்கள் என்றும்,கைதான 5 ஆடவர்கள் குற்ற செயல் மற்றும் போதைப்பொருள் ஆகிய குற்றசாட்டினை இதற்க்கு முன்னர்  ஈடுபட்டவர்கள் என்றும் மேலும் இருவர் எவ்விதக் குற்ற பின்னணி இல்லாதவர்கள் என்றும் அவர் விவரித்தார்.

கைதான செய்யப்பட்ட ஆடவர்கள் செக் ஷன் 379 A   எனும் பிரிவில் குற்றம் சுமத்தப்படுவார்கள்  என்றும்,குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டுக்குள்ள சிறை தண்டனை அல்லது ஏழு ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க சட்டம் வழி வகுப்பதாக  ஏசிபி சோப்பியான் சந்தோங் குறிப்பிட்டார்.

 20 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *