English Tamil Malay

பட்டர்வொர்த், ஜூலை 1 –
பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் செ.குணாளனின் மகள் பாரதிப்பிரியா என்ற பாரதி மலேசிய சபா பல்கலைகழகத்தில் உளவியல் (தொழில் மற்றும் அமைப்பு) துறையில் இளங்களை பட்டம் பெற்றார். Bachelor of pychology with honours (industry and organization).

கடந்த மூன்று ஆண்டுகள் சபா பல்கலைகழகத்தில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ள இவர் இதே பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற தனது மேல் உயர் கல்வியை தொடர்ந்துள்ளார். பட்டர்வொர்த் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியுன் முன்னாள் மாணவியான கு.பாரதிப்பிரியா,பட்டர்வொர்த் சென் மார்க் பள்ளியில் 5 ஆம் படிவம் வரைதிலும், தெலோக் ஆயிர் தாவார் இடைநிலைப் பள்ளியில் 6 ஆம் படிவம் வரை பயின்று சபா மாநில பல்கலைகழகத்தில் நுழைந்தார்.

ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளியில் இவர் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியாகவும், புறப்பாடா நடவடிக்கையிலும் சிறந்த மாணவியாக விளங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 216 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *