English Tamil Malay

கோலாலம்பூர் மே 24
கடந்த சில தினங்களுக்கு முன் தேசம் ஊடகத்தின் தங்க விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆசியா மாஸ்டர்ஸ் ஓட்டப்பந்தய சங்கத்தின் கௌரவ தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் வீ. புலேந்திரனுக்கு விளையாட்டுத்துறையிலின் வரலாற்று நாயகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கூட்டரசு பிரதேச கோலாலம்பூர் ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைவருமான டத்தோஸ்ரீ புலேந்திரனுக்கு இந்த விருதை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வழங்கினார்.

நாட்டின் முன்னாள் முன்னணி ஓட்டக்காரான டத்தோஸ்ரீ புலேந்திரனுக்கு இந்த விருது சாலப் பொருந்தும் என சரவணன் கூறினார்.
ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டத்தோஸ்ரீ புலேந்திரன் தமது சொந்த உழைப்பால் இன்று ஒரு சிறந்த தொழிலதிபராக விளங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிக்பீல்ட்ஸ், மஸ்ஜித் இந்தியா ஆகிய முக்கிய இடங்களில் பல நகைக் கடைகளுக்கு உரிமையாளர் டத்தோஸ்ரீ புலேந்திரன் என்பது பெருமை படக்கூடிய ஒரு விவகாரம் என்றார் அவர்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஊடகம் அரசு சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.

 40 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *