English Tamil Malay

Lllபெட்டாலிங் ஜெயா மே 24
நாட்டில் கோழி பற்றாக்குறைக்கு நடப்பு அரசாங்கம் காலம் கடந்து நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் கூறினார்.
நாட்டில் கோழி விநியோகம் பற்றாக்குறை குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவை அவசரமாக கூடியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துலக விவகாரங்களை பற்றி பேச இந்த சிறப்பு அமைச்சரவை கூடவில்லை என்றார் அவர்.
அரசாங்கம் விதித்துள்ள
ஒரு கிலோ கோழியின் உச்சவரம்பு விலை வெ 8.90, மக்களுக்கு ஏற்புடையதல்ல என்றார் அவர்.

Jஇதை விட கூடுதல் விலை கொடுத்தால் மட்டுமே சாதாரண மக்களால் கோழிகளை வாங்க இயலுகிறது என்றார் அவர்.
பி40 வறுமைக் கோட்டில் உள்ள பாமர மக்கள் அதிக விலை கொடுத்து கோழிகளை வாங்க இயலாது என பாக்காத்தான் ஹராப்பான் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

கோழிகளுக்கான மருந்துகளின் விலை, கோழிகளை பராமரிக்கும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு அதிகரிப்பின் காரணமாக கோழிகளின் விலை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கோழி இறைச்சி என்பது பி40 தரப்பினரின் சத்துள்ள உணவு என்பது குறிப்பிடத்தக்கது என அவர் சொன்னார்.
நாட்டில் கோழி பற்றக்குறை பிரச்சனைக்கு நடப்பு அரசாங்கம் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

K8jஇந்த விவகாரத்தில் அரசாங்கம் மெத்தனப் போக்கை கடைப்பிடித்தால், கோழி விற்பனையாளர்கள், பயனீட்டாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்க கூடும் என அவர் நினைவுறுத்தினார்.


நாட்டில் கோழி பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வுகாண கோழி ஏற்றுமதியை அரசாங்கம் தற்காலிகமாக தடை செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி இன்று கூறி88iii9னார்.
கோழி பற்றக்குறை தீர்வு காணப்படும் வரை இந்த தடை நீடிக்கும் என்றார் அவர்.

 28 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *