ஜித்ரா மே 24
கெடா அரசு சாரா அமைப்புகள் ஏற்பாட்டில் போர்ட் கம்பிங் பாக்கார் ஜித்ராவில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்முடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற அலுவலகம் மற்றும் பிகேஆர் மெர்போக் தொகுதி ஆதரவில் மே 19 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அன்வாருடன் புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற உறுப்பினர் ஆர். சண்முகம் மெர்போக் தொகுதி மகளிர் அணி வேட்பாளர் கீரன், உதவித் தலைவர் வேட்பாளர் சாப்பினாஸ், டத்தோ ஜொகாரி அப்துல்,கெடா பாக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ பொறுப்பாளர்கள், டாக்சி ஓட்டுநர்கள் சங்க பிரதிநிதிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், சிறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் அரசு சாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள் உரையாற்றினார்.
மேலும் இவர்கள் அன்வாரிடம் மகஜரை சமர்ப்பித்தனர்.
நஇவர்களின் முறையீடுகளை தாம் பரிசீலிப்பதாக பாக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் தமது உரையில் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கிவருவதாக அவர் தெரிவித்தார்.
42 total views, 2 views today