English Tamil Malay

அகல்யா
பட்டர்வொர்த், மே 23 –
நாம் நம் வாயை மட்டும் அடக்கி வைத்தால் நிச்சயம் வாய்மை வெல்லும் என்று பட்டர்வொர்தில் நடந்த தென்றல் வானம்பாடி தொடர் பயணம் நிகழ்ச்சியில் ஆசிரியர் வித்யாசாகர் அறிவுறுத்தினார்.

நாம் பல நேரங்களில் தேவையில்லாதவற்றை நேரடியாகவும், மறைமுகமாகவும், சமூக ஊடகங்களின்வழியும் கருத்தும், தம்பட்டமும் அடிப்பதால் இந்த நாட்டில் நம்முடைய நிலமை, நாம் எந்த நிலையில் வாழ்கிறோம், நம் நிலைபாடு என்னவென்பதை அனைத்து மக்களும் தெரிந்துக்கொள்வதால் நாம் இன்று பின்தள்ளபட்ட நிலையில் வாழ்கிறோம் என்று தென்றல் ஆசிரியர் வித்யாசாகர் கூறினார்.

பினாங்கு பாரம்பரிய சமூகநல இயக்கத்தின் ஏற்பாட்டில் திசையெல்லாம் தென்றல் எனும் தென்றல் வானம்பாடி இலக்கிய தொடர்பயண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இயக்கத்தின் தலைவர் குமாரி சுமதி தலைமையில் நடந்த தென்றல் வானம்பாடி விழாவில் தமிழ் வாழ்த்து, குத்து விளக்கு ஏற்றல், பரதத்துடன் தொடங்கியது. வாசகர்களின் கருத்து, ஆசிரியரின் தலையங்கம், தென்றல் வானம்பாடி இதழின் உள்ளடக்கம் போன்ற கலை அம்சங்களை வாசகர்கள் அழகுத் தமிழில் விவரித்தனர்.

பாவலர் கோவதன், கவிஞர் ச.நா.வேணுகோபால், கவிஞர் ம.கனகராஜன் கவிதை வாசித்தனர்.பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் செ.குணாளன் வரவேற்புரையுடன் கவிதை வாசித்தார். கூலிம் நெடுமாறனின் இசைக்குழு பாடல்கள், பலகுரல் சக்கரவர்த்தி எம்.எம்.சண்முகத்திப் இருகுரலிசை, தென்றல் வானம்பாடியின் நிர்வாக ஆசிரியர் வித்யாசாகரின் இலக்கிய கருத்தியல் உரை என்று தென்றல் வானம்பாடி தொடர் பயணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தென்றலின் முக்கிய சகாக்களான தென்னரசு, விகடகவி முதல் நாள் வருகைத்தந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைந்தனர்.

பினாங்கு மஇகா தலைவர் ஜெ.தினகரன், மதிக தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை, பினாங்கு சமூக ஆர்வலர் டத்தோ சௌந்தரராஜன், பட்டர்வொர்த் இந்து சங்கத் தலைவர் கோ.சண்முகநாதன், அரசியல் புரமுகர்களான ஆர்.சிவசுந்தரம், ச.குமரேசன், மேலும் பல பிரமுகர்கள் தென்றல் விழாவை களைகட்ட வைத்தனர். அடுத்த ஆண்டும் தென்றல் வானமாடி விழா நடைபெற அறிவிக்கப்பட்டது. வருகை அளித்த பிரமுகர்கள் சிறப்பிக்கப்பட்டனர். தென்றல் வானம்பாடி இதழ்கள் வருகையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

 198 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *