English Tamil Malay

அகல்யா
வேலூர், ஏப் 28 –
தமிழ் நாடு வேலூர் மாவட்டம் என்றாலே சிறப்பு, அதிலும் வேலூர் மாவட்டம், 3 வது தெரு, சின்ன அல்லாபுரம் என்றாலே மேலும் சிறப்பு.

அந்த சின்ன அல்லாபுரம் 3 வது தெருவில் நோன்புக் கஞ்சி என்பது மிக மிக சிறப்பு . நோன்புப் பெருநாளை வரவேக்க ஒரு மாத காலம் நோன்பு வைக்கும் வேலூர் மாவட்ட சின்ன அல்லாபுரத்து முஸ்லிம் பெருமக்கள், சுற்று வட்டார மக்களுக்கு இனம், மொழி, பண்பாடு,சமயம் என்று பாராமல் அனைத்து இன மக்களுக்கும் மசூதி சார்பாக தயார் செய்து கொடுப்பதுதான் சுவையான, மிக மிக சுவையான நோன்புக் கஞ்சி.

வேலுர் மாவட்ட அருமை அண்ணல் சான் பாஷா உடனிருக்கு அங்குள்ள மசூதியின் ஏற்பாட்டில் வழங்கப்படும் நோன்புக் கஞ்சி இங்கு மிக பிரபலமாக திகழ்கிறது.

சின்ன அல்லாபுரத்து சுற்று வட்டார மக்களுக்கு நற்சேவை ஆற்றுவதும் உதவி என்று கேட்போருக்கு ஓடி என்று உதவிவதும் சின்ன அல்லாபுரத்து மக்களின் இயல்பான குணம் என்பதால் இவர்கள் தனி தன்மையோடு திகழ்கிறார் , அதே வேளையில் சான் பாஷா என்றால் அவர் சிறப்புக்குரியவர் .


ஒவ்வொரு நோன்புப் பெருநாளுக்கும் சிறப்பு உணவாக தயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சி 300 முதல் 350 பேர்கள் ஒவ்வொரு நாளும் நோன்புக் கஞ்சியை பெற்றுச் சென்று சுவைத்து மகிழார்கள். சுற்று வட்டார சின்ன அல்லாபுர்த்து மக்கள் சார்பாக இந்த சிறப்பான நாளின் உலகலாவிய அனைத்து முஸ்லிம் பெருமக்களுக்கு தனது பெருந்தாள் வாழ்த்தினை அலை ஒளி ஊடக வாயிலாக பதிவு செய்கிறார் வேலூர் மாவட்ட சின்ன அல்லாபுரத்து சான் பாஷா.

 183 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *