English Tamil Malay

புக்கிட் மெர்தாஜம்
ஏப் 24 நோன்பு பெருநாளை முன்னிட்டுப் புக்கிட் மெர்தாஜம் தமிழ் முஸ்லிம் இயக்கம் வசதி குறைந்த இந்திய முஸ்லிம்கள் மற்றும் இந்தியர்களுக்குப் பொருளுதவி வழங்கி ஆதரவு அளித்தனர்.


புக்கிட் மெர்தாஜம் தமிழ் முஸ்லிம் இயக்கம் தலைவர் கனி முகமட் மீராசா மற்றும் தஞ்ஜோங் முஸ்லிம் இயக்க தலைவர் முகமட் முகைதீன் நாசீர் இணைந்து மக்களுக்கான பொருளுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வசதிக் குறைந்த மக்களும் நோன்பு பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் விதத்தில் வழங்கப்பட்ட பொருளுதவி உதவியாக இருக்கும்மென முகமட் முகைதீன் நாசீர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உடன் பினாங்கு எம்ஜிஆர் மறுமலர்ச்சி முன்னேற்ற இயக்க நிறுவனர் டாக்டர்,எல்.ஆர்.சிவபாலன்,பினாங்கு மாநில ஐபிஎப் கட்சியின் தலைவர் டாக்டர் ச.குமரேசன் ஆகியோர் சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



 163 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *