English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் மார்ச் 31
போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுக்கு எதிராக சிங்கப்பூர் பழமை வாய்ந்த சட்டங்களை பயன்படுத்தி வருவதாக பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. இராமசாமி சாடினார்.

போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கூடுதல் பற்ற தண்டனையை வழங்கி சிங்கப்பூர் உலகிற்கு எதை நிரூபிக்க போகிறது என்று தெரியவில்லை என்றார் அவர்.

மரண தண்டனையை எதிர்த்து நாகேந்திரன் தர்மலிங்கம் (34) செய்து கொண்ட விண்ணப்பத்தை சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து விட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு 4.27 கிரம் ஹெரோயின் கடத்திய குற்றத்திற்காக நாகேந்திரன் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த மரண தண்டனையை எதிர்த்து அவருக்கு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்துள்ளது அவர் குற்றவாளி என்பதற்காக அல்ல, காரணம் நாகேந்திரன் ஒரு மனநோயாளி என இராமசாமி தெரிவித்தார்.

மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் தமது செயல் நடவடிக்கைகளின் பின் விளைவுகளை உணர முடியாததால், அந்த மரணதண்டனை மாற்றப்பட வேண்டும் என்பதே அவரின் வழக்கறிஞர்களின் வாதம் என்றார் அவர்.

தமது மேல்முறையீடு அனைத்திலும் நாகேந்திரன் தோல்வி கண்டு விட்டதால், சிங்கப்பூர் அதிபரிடமிருந்து பொதுமன்னிப்பை நாகேந்திரன் நாடி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுதந்திரமடைந்த நாள் முதல் சிங்கப்பூர் குறிப்பாக போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பழமை வாய்ந்த சட்டத்தை கையாண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை போதைப் பொருள் கடத்தலுக்காக சிங்கப்பூர் 25 பேரை தூக்கிலிட்டுள்ளதாக இராமசாமி தெரிவித்தார்.

 176 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *