English Tamil Malay

அகல்யா
சுங்கை பட்டாணி, மார்ச் 10 –
சுங்கை பட்டாணியில் 50 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு அமைப்புகளில் சேவையாற்றியுள்ளவரும், திரையொலி மாத இதழின் தீவிர எழுத்தாளரும், மதிக கெடா மாநில செயலாளருமான ஜெ.வ.இராஜகோபால் உடல் நலக் குறைவால் காலமானார்.

கெடா டம்ளின் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த தோட்ட பாட்டாளியின் மகனான இராஜகோபால் வாடகை வண்டி சொந்தமாக வைத்து தன் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை ஈட்டியவர். அதே வேளை 1970 களில் மலேசியாவில் எஸ்.அண்ணல் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த திரையொலி மாத இதழின் தீவிர வசகராகவும், எழுத்தாளருமாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் திரு.இராஜகோபால்.

75 வயதை அடைந்துவிட்ட இராஜகோபால் 1957 இந்தியா சுதந்திரம் அடைந்ததை முன்னிட்டு அவரின் தந்தையார் ஜெயராமன் இராஜகோபாலை சுந்தந்திரம் என்று அடை மொழி வைத்து அழைத்ததை எங்கள் வாழ் நாளின் மறக்க முடியாத நினைவுகள் என்று அன்னாரின் உடன் பிறந்த தம்மியும், சுங்கை ஆராவில் பிரபலமானவருமான ஜெ. ஜெயசீலன் கண்ணீருடன் கூறினார்.

திரு.இராஜகோபால் அவர்களின் நாளை 11-03-2022 வெள்ளிக்கிழமை, கம்போங் சுங்கை துக்காங்கில் ( கிச்சாலகரை ) உள்ள அன்னாரின் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று நல்லடக்கம் செய்யப்படும் என்று ஜெயசீலன் கூறினார். தொடர்புக்கு 016-7844005

 286 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *