English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் பிப் 22 தனித்து வாழும் தாயான லோ சிவ் ஹோங் மற்றும் அவரது வயது குறைந்த 3 பிள்ளைகளுக்கு புதிய வாழ்க்கை தொடங்கியதாக பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. இராமசாமி கூறினார்.


தமது பிள்ளைகளை மீட்க நீதி கேட்டு நீதிமன்றம் சென்று லோவிற்கு நீதி கிடைத்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இந்த விவகாரத்தில் தமது பிள்ளைகளை தம்முடைய பராமரிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை லோ கொண்டு வந்தார்.

தமது வயது குறைந்த மூன்று பிள்ளைகளை தமது பராமரிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு சராசரி தாயின் ஆதங்கம் தான் லோவிற்கு இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும்.

ஆனால் பொறுப்பற்ற சில தரப்பினர் இந்த விவகாரத்தை இன மற்றும் மதப் பிரச்சனையாக கொண்டு வந்துள்ளனர்.
இந்த பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக பெர்லிஸ் சமய இலாகா மதமாற்றம் செய்வது சட்டத்திற்கு முரண்பாடான ஒரு விவகாரமாகும் என்றார் அவர்.

வயது குறைந்த பிள்ளைகள் தாயின் அனுமதியின்றி மதமாற்றம் செய்வது ஒரு சட்டவிரோதமான செயல் என  அவர் சுட்டிக்காட்டினார்.

நாகேஸ்வரன் முனியாண்டி மற்றும் லோவிற்கு இடையே ஏற்பட்ட ஒரு சிறிய மனக்கசப்பால் இந்தப் பிள்ளைகள் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.

மாநில சட்டங்களை விட கூட்டரசு நீதிமன்றத்தின் உத்தரவுதான் அனைத்திற்கும் மேலானது என்பதை பெர்லிஸ் முப்தி மற்றும் பெர்லிஸ் சமைய இலாகா புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

 104 total views,  2 views today

One thought on “லோ மற்றும் அவரது பிள்ளைகளுக்கு புதிய வாழ்க்கை தொடங்கியது”
  1. Prof. Ramasamy, has said it rightly that the Perlis lslamic religious department had errored in detaining Loh’s three children in the childrens home, knowing well that the mother obtained full custody of her children in the High Court in 2021. The religious department had shown more haste in uniletral conversion of the children while denying the right for the mother to have the children in her custody.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *