English Tamil Malay
Spread the love

பினாங்கு

ஆர்.தசரதன்

நவ 18
பினாங்கு மாநிலத்தில் ஜாலான் பினேங் ஸ்தீரிட் பகுதியில்,அனந்த பவன் உணவகத்தின் முன் புறத்தில் பிச்சா விற்பணை துறையில் சாதணை படைத்து வருகிறார் விஷ்ணு வேலு வயது 44.கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பிச்சா விற்பணையாளராக இருந்து வருவதாகவும்,ஒரு விற்பணை வாகனம் (Food Truck ) மூலமாக மாலை 7.00 தொடக்கம் இரவு 10.30 மணியிளவில் பிச்சா விற்பணை செய்து வருவதாக அலை ஒளி ஊடகத்திடம் வழங்கிய பேட்டியில் விஷ்ணு கூறினார்.

தமது பிச்சா விற்பணை அனைத்தும் சைவமாக 6 வவையில் தயாரிப்பு செய்து விற்பணை செய்வதாகவும், அதில் மாஸ்ரும் பிச்சா,வெஜி கார்டன் போன்ற வகை பிச்சா பொது மக்கள் அதிகம் விரும்பு வாங்கி செல்வதாக விஷ்ணு கூறினார்.

தமது பிச்சா விற்பணை துறைக்கு அதற்கான பினாங்கு மாநகர் மன்ற உரிமம் பெற 6 மாதக் காலம் காத்திருந்த்தாகவும்,பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர், டாக்டர் ப.இராமசாமி அவர்களின் தயவால் பினாங்கு மாநகரில் பகுதிகளில் வியாபராம் செய்ய உரிம அனுமதியுடன் வியாபாரம் செய்ய முடிந்ததாக கூறிய விஷ்ணு, பேராசிரியர் ப.இராமசாமிக்கு தமது நன்றியை கூறிக்கொள்வதாக குறிப்பிட்டார்.

அதிகமாக பல்லின மக்கள் தனது பிச்சாவை வாங்கி ஆதரவு தெரிவளித்து வருகின்றனர்,மேலும் இந்தியர்களின் ஆதரவுக் கரமும் தொடர வேண்டும் என இரு பிள்ளைகளுக்கு தந்தையாரான அவர் மனம் திறந்து பேசினார்.

இதனுடையே கோவிட்-19 தொற்று காரணமாக பலவேறு பிரச்சணைகளை எதிர்நோக்கி வருவதாகவும்,சில சமையங்களில் விபாரம் தொடந்து நடத்த முடியாத சூழ்நிலை உறுவாகியுள்ளது இருப்பினும் மாதம் மாநகர் மன்றதுக்கான உரிம தொகையாக வெ450 செலுத்தும் நிலை உருவாகியுள்ளது இறுப்பினும் தொடர்ச்சியாக கடினமாக உழைப்பின் மூலமாக இதனை சமாளித்து வருவதாக மேலும் விவரித்தார்.

வியாப துறையில் இந்தியர்கள் துணிந்து ஈடுப்பட வேண்டும் என்பதுடன்,முந்தைய காலத்தில் உடம்பு பிடி நிறுவனத்தை சொந்தமாக நடத்தியதுடன் அதன் பிறகு சொந்தமாக சைவ வகையிலான பிச்சா விற்பணையை வகனம் மூலமாக பினாங்கு மாநகரில் 3 முக்கிய பகுதிகளில் விற்பணை செய்து வருவதாக கூறினார்.பிச்சா வாங்க நினைக்கும் பொது மக்கள் தம்மை 0164595251 எனும் கைபேசி தொடர்புக் கொள்ளலாம் என அவர் வேண்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *